September 11, 2024
தேசியம்
கட்டுரைகள் செய்திகள்

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக பேரவையுடனும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடனும் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கனடா ஊக்குவிக்கின்றது.

இலங்கை குறித்த மையக் குழு நாடுகளான கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடோனியா, மலாவி, மென்ரநீக்றோ, ஐக்கிய இராச்சியம் ஆகியன சார்பாக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் இல்லாத விடயங்கள் குறித்து கவலை எழுப்பப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர் குறித்து இந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டதுடன், நீதியைப் பெறுவதற்குச் சுதந்திரமானதும் நம்பகத்தன்மையுள்ளதுமான நிறுவனங்கள் முக்கியமென்ற விடயம்  மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முழுமையான வடிவம் இது;

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடர்

இலங்கை குறித்த மையக் குழு நாடுகளான கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா,  மலாவி, மென்ரநீக்றோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன சார்பாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

பேரவையின் 46/1 தீர்மானம் போரின் தொடரும் பாதகமான விளைவுகளுக்குத் தீர்வு காணுமாறும், மதச் சிறுபான்மையினர் உட்பட்டோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதமை எமக்கு வருத்தமளிப்பதுடன்ரூபவ் கவலையை ஏற்படுத்தும் மேலும் சில விடயங்களும் இடம்பெற்றுள்ளன.

அடையாளச் சின்னங்களாக விளங்கும் சில வழக்குகளைத் தள்ளுபடி செய்வதற்கும், இந்த வழக்குகளில் சிலவற்றை நடத்த முற்படுவோருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசு முற்பட்டுள்ளது. தாமதமின்றிரூபவ் முழுமையானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை நடத்துமாறு பேரவை விடுத்த கோரிக்கைக்கு இது எதிரானது. குற்றப் புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாம் கோருகிறோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுத்துவதும்ரூபவ் நீதித்துறையின் போதிய மேற்பார்வை இன்றிய புனர்வாழ்வு நடைமுறையை அறிமுகம் செய்யும் அண்மைய திட்டமும் எமக்கு ஆழ்ந்த கவலையளிக்கிறது. மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவும், கவிஞரும், ஆசிரியருமான ஆனாஃப் ஜஸீமும்ரூபவ் வழக்கு விசாரணையின்றித் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்,  சிறுபான்மையினர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உட்பட்டோர் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது.

நினைவேந்தல்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்வதையிட்டு எமது கவலை தொடர்கிறது. காவல்துறைத் தடுப்புக்காவலில் அண்மையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்துச் சுதந்திரமான, பக்கச்சார்பற்ற விசாரணைகள் தேவையென இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை நாமும் முன்வைக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டோர் குறித்து நாம் கவலைகொண்டிருப்பதுடன், நீதியைப் பெறுவதற்குச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மையுள்ளதுமான நிறுவனங்கள் முக்கியமென்பதை மீள வலியுறுத்துகிறோம்.

46/1 தீர்மானம் தொடர்பாகப் பேரவையுடனும்ரூபவ் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்துடனும் ஒத்துழைக்குமாறு இலங்கையை நாம் ஊக்குவிப்பதுடன்,  இதில் ஆதரவளிக்கத் தயாராகவும் இருக்கிறோம்.

Related posts

Quebec கர்தினால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

Lankathas Pathmanathan

ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை அமுலுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment