தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி அறிமுகம்: Theresa Tam

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார். முழுமையாக  தடுப்பூசி பெற்ற கனேடியர்கள் பாதுகாப்பாக என்ன செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசனை விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தடுப்பூசிகளை பெற்ற காரணத்தால் மாத்திரம் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அகற்ற முடியாது எனவும் Tam எச்சரித்தார்.

முழுமையாக தடுப்பூசி பெற்ற பின்னர் கனேடியர்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தகுதிவாய்ந்த கனேடியர்களில் 23 சதவீதமானவர்கள் பேர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.  76 சதவீத கனடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

புதிய சுகாதாரப் பாதுகாப்பு சட்ட மூலத்தை முன்வைத்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment