தேசியம்
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் விவரங்களை எதிர்பார்க்கலாம்: பிரதமர்

எல்லை கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் வரவிருக்கும் வாரங்களில் வெளியாகும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் கூடுதல் விவரங்களை எதிர்பார்க்கலாம் என பிரதமர் கூறினார். தடுப்பூசிகள் வழங்கல் தொடர்ந்து அதிகரித்து, தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்தால் பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தலாம்  என பிரதமர் கூறினார்.

படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் எல்லையை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை தொடர்ந்து ஆலோசிப்பதாக Trudeau செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கனடா இரண்டு வாரங்களில் நீக்குவதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja

அனைத்து மாகாணங்கள், 2 பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கைகள்

Lankathas Pathmanathan

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

Leave a Comment