தேசியம்
செய்திகள்

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Toronto போக்குவரத்து சபையின் – TTC – தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக உள்ளதாக அறிவித்தார்.

கோடை கால இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக TTC தலைமை நிர்வாக அதிகாரி Rick Leary அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக Rick Leary  வியாழக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

இந்த பதவி விலகல் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

அவரது பதவி விலகல் August 30 முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் அறிவிக்கப்படுவார் என TTC தலைவர் Jamaal Myers கூறினார்.

Related posts

Markham- Thornhill தொகுதி Conservative கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment