September 2, 2026
தேசியம்
செய்திகள்

Ontario மாகாணத்தின் மோசமான 10 சாலைகள் பட்டியல் வெளியானது

Ontario மாகாணத்தின் மோசமான 10 சாலைகளில் Toronto நகரின் நான்கு தெருக்கள் அடங்குகின்றன.

CAA வெளியிடும் வருடாந்த ‘மோசமான சாலைகள்’ பட்டியலில் Hamilton நகரம் மீண்டும் Ontario மாகாணத்தின் மிக மோசமான சாலையாகத் திகழ்கிறது.

Hamilton நகரின் Barton Street East 2026 -ஆம் ஆண்டு பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

மாகாணம் முழுவதும் உள்ள தங்கள் சமூகங்களில் இருக்கும் மிக மோசமான சாலைகளுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை CAA வருடாந்தம் அழைப்பு விடுப்பது வழக்கமாகும்.

Mississauga நகரின் Hurontario Street மாகாணத்தின் இரண்டாவது மிக மோசமான சாலையாகத் தரவரிசைப்படுத்தப்பட்டது.

Greater Sudbury நகரின் Notre Dame Avenue மூன்றாவது இடமாக தெரிவானது.

நான்காவது இடத்தை Fort Erie நகரில் உள்ள Sider Road பிடித்தது.

மாகாணத்தின் ஐந்தாவது, ஆறாவது மோசமான சாலைகள் இரண்டும் Steeles Avenue East, Sheppard Avenue West என Toronto-வில் இருந்தன.

Ontario-வின் மிக மோசமான 10 சாலைகள்:

  1. Barton Street East, Hamilton
  2. Hurontario Street, Mississauga
  3. Notre Dame Avenue, Sudbury
  4. Sider Road, Fort Erie
  5. Steeles Avenue East, Toronto
  6. Sheppard Avenue West, Toronto
  7. Panache Lake Road, Sudbury
  8. Bathurst Street, Toronto
  9. Unwin Avenue, Toronto
  10. 6th Line, Innisfil

Related posts

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan

புதிய சுகாதாரப் பாதுகாப்பு சட்ட மூலத்தை முன்வைத்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தில் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment