September 11, 2026
தேசியம்
செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் OPP அதிகாரி பலி

நெடுஞ்சாலை 401-ல் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த OPP அதிகாரி நினைவு கூறப்படுகிறார்.

திங்கட்கிழமை (27) நெடுஞ்சாலை 401-ல் நிகழ்ந்த விபத்தில் Ontario மாகாண காவல்துறை அதிகாரி Sgt. Brandon Malcolm உயிரிழந்தார்.

33 வயதான இவர் பணியில் இருந்தபோது பலியானார்.

2020 June மாதம் OPP-யில் இணைந்த அவர் தனது முழு பணிக்காலத்தையும் Northumberland  பிரிவில் பணியாற்றியதாக OPP தெரிவித்துள்ளது.

OPP-யில் இணைவதற்கு முன்னர் அவர் கனடிய ஆயுதப் படையில் பணியாற்றினார்.

திங்கள் இரவு, Toronto நகரின் மையப்பகுதியில் உள்ள தலைமை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டபோது, பெரும் எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகள் அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த விபத்து தொடர்பான விபரங்கள் இன்னமும் தெளிவாக வெளியாகாத நிலையில் காவல்துறையினர் தமது விசாரணையை  தொடர்கின்றனர்.

Related posts

கனேடியர்களுக்கு மின்னணு விசா சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan

அமெரிக்காவிடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை கனடா வரும்!

Gaya Raja

தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கனடாவில் வாகன பேரணி

Lankathas Pathmanathan

Leave a Comment