தேசியம்
செய்திகள்

Ontario பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளுக்கு முழுமையான தடை சாத்தியம்?

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளை முழுமையான தடை செய்வது  குறித்து Ontario மாகாண அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக Ontario கல்வி அமைச்சர் Paul Calandra தெரிவித்தார்.

கைத்தொலைபேசிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் Paul Calandra கூறினார்.

எமது பாடசாலைகளில் கைத்தொலைபேசி பயன்பாடு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாகி வருவதாக கருதுவதாக  Paul Calandra செவ்வாய்கிழமை (28) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யும் முதல் மாகாணமாக தனது மாகாணம் திகழும் என Manitoba முதல்வர்  Wab Kinew அண்மையில் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியானது.

Related posts

கனடிய சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் – இலங்கை வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Greenbelt திட்டங்கள் குறித்த முடிவு தவறு : Doug Ford

Lankathas Pathmanathan

British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !

Gaya Raja

Leave a Comment