நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கு Liberal அரசாங்கத்திற்கு ஒரு உறுப்பினர் குறைவான நிலை தோன்றியுள்ளது.
நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu, Conservative கட்சியில் இருந்து விலகி Liberal அரசாங்கத்துடன் இணைகிறார்.
இந்த கட்சி மாற்றத்தை புதன்கிழமை (08) Liberal கட்சி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
இதனால் பிரதமர் Mark Carney-யின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை கிடைப்பதற்கு ஒரு ஆசனம் குறைவாக உள்ளது.
கடந்த சில மாதங்களில் Liberal கட்சியில் இணையும் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினரும், நான்காவது Conservative நாடாளுமன்ற உறுப்பினரும் Marilyn Gladu ஆவார்.

Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont, Toronto பெரும்பாக நாடாளுமன்ற உறுப்பினர் Michael Ma, Edmonton நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux ஆகியோர் கடந்த மாதங்களில் Conservativenகட்சியில் இருந்து விலகி ஆளும் Liberal அரசில் இணைந்தனர்.
கடந்த மாதம், பிரதமர் Mark Carney, Nunavut தொகுதியின் பிரதிநிதியான முன்னாள் NDP நாடாளுமன்ற உறுப்பினர் Lori Idlout-டையும் தனது கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கடந்த April மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இருந்து, Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான 172 ஆசனங்கள் என்ற வரம்பை ஒட்டியே இருந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் சிலர் தூதரகப் பதவிகளை ஏற்றுக் கொண்டு தங்கள் பதவிகளில் இருந்து விலகிய போதிலும், November மாதம் முதல் கட்சி மாறியவர்களின் தொடர்ச்சியான வருகையால் Liberal கட்சி அந்த இடைவெளியை ஈடு செய்து, புதன்கிழமை நிலவரப்படி 171 ஆசனங்களை கொண்டுள்ளது .
சபாநாயகர் ஒரு Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், Mark Carney அரசாங்கம் 173 ஆசனங்களைப் பெற்றால், சபையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த வாரம் திங்கட்கிழமை (13) மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Liberal கட்சி இந்த மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Toronto-வில் உள்ள தங்களின் கோட்டையான University-Rosedale, Scarborough தென்மேற்கு ஆகிய தொகுதிகளை Liberal கட்சியினர் இந்த இடைத்தேர்தலில் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
