September 30, 2026
தேசியம்
செய்திகள்

அரசாங்கத்துடன் இணைந்தார் மற்றொரு Conservative உறுப்பினர்

மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Liberal அரசாங்கத்துடன் இணைகிறார்.

நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu அரசாங்கத்துடன் இணைகிறார்.

இந்த கட்சி மாற்றத்தை புதன்கிழமை (08) Liberal கட்சி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

Sarnia-Lambton-Bkejwanong நாடாளுமன்ற உறுப்பினரான 2015 முதல் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் Marilyn Gladu வெற்றி பெற்றவராவார்.

Liberal அரசாங்கத்தின் புதிய உறுப்பினராக Marilyn Gladu-வை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

வலுவானதும் சுதந்திரமானதுமான கனடியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தீவிரமான தலைமையையும் ஒரு உண்மையான திட்டத்தையும் தனது தொகுதி மக்கள் விரும்புவதாக தெரிவித்த Marilyn Gladu, அந்த தலைமையை Mark Carney கொண்டுள்ளதாக கூறினார்.

Marilyn Gladu பல எதிர்க்கட்சி விமர்சகர் பதவிகளை வகித்துள்ளார்.

Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதாக 2020-இல் அவர் அறிவித்தார்.

ஆனால் கட்சி அவரைத் தகுதியற்றவர் எனக் கருதியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களில் Liberal கட்சியில் இணையும் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினரும், நான்காவது Conservative நாடாளுமன்ற உறுப்பினரும் இவராவார்.

கடந்த April மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இருந்து, Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான 172 ஆசனங்கள் என்ற வரம்பை ஒட்டியே இருந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் சிலர் தூதரகப் பதவிகளை ஏற்றுக் கொண்டு தங்கள் பதவிகளில் இருந்து விலகிய போதிலும், November மாதம் முதல் கட்சி மாறியவர்களின் தொடர்ச்சியான வருகையால் Liberal கட்சி அந்த இடைவெளியை ஈடு செய்து, புதன்கிழமை நிலவரப்படி 171 ஆசனங்களை கொண்டுள்ளது .

இந்த நிலையில் அடுத்த வாரம் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Liberal  கட்சி இந்த மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தடையாக இருக்காது: கனடிய தேர்தல் திணைக்களம் உறுதி

Gaya Raja

Calgary நகர முன்னாள் முதல்வர் உள்ளிட்டவர்கள் தொடர்பான புகார் குறித்து RCMP விசாரணை?

Lankathas Pathmanathan

மீண்டும் Toronto நகரசபைக்கு தெரிவானார் நீதன் சான்!

Lankathas Pathmanathan

Leave a Comment