November 13, 2025
தேசியம்
செய்திகள்

பிரதமரின் அமைச்சரவை மாற்றம்

பிரதமர் Justin Trudeau சிறிய அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொண்டுள்ளார்.

Ontarioவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களான Filomena Tassi, Helena Jaczek ஆகியோர் புதன்கிழமை (31) தமது அமைச்சு பதவிகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.

Helena Jaczek கனடாவின் புதிய பொது சேவைகள், கொள்முதல் அமைச்சராகவும், Filomena Tassi தெற்கு Ontarioவிற்கான மத்திய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றனர்

இந்த மாற்றம் தனது குடும்பத்தின் சுகாதாரத்துடன் தொடர்புடைய பணிச்சுமை காரணமாக அமைச்சர் Tassi முன்வைத்த கோரிக்கைக்கு இடமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tassi, கனடாவின் தடுப்பூசிகள், புதிய போர் விமானங்கள் கொள்வனவை மேற்பார்வையிடும் அமைச்சை முன்னர் பெறுப்பேற்றிருந்தார்.

அடுத்த வாரம் Vancouver நகரி்ல் நடைபெறவுள்ள Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.

Related posts

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Markham Stouffville தொகுதியின் Conservative வேட்பாளர் தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment