தேசியம்
செய்திகள்

வாக்காளர்கள் வழங்க மறுத்த பெரும்பான்மையை கட்சி மாற்றம் மூலம் கைப்பற்ற முயலும் Mark Carney?

வாக்காளர்கள் வழங்க மறுத்த Liberal பெரும்பான்மையை, கட்சி மாற்றம் மூலம் Mark Carney கைப்பற்ற முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார்.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu, Liberal அரசாங்கத்துடன் புதன்கிழமை (08) இணைந்த நிலையில் இந்த விமர்சனம் வெளியானது.

கடந்த சில மாதங்களில் Liberal கட்சியில் இணையும் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினரும், நான்காவது Conservative நாடாளுமன்ற உறுப்பினரும் Marilyn Gladu ஆவார்.

இந்த நிலையில் “திரைமறைவு ஒப்பந்தங்கள்” மூலம் அரசாங்கம் ஆதரவைத் திரட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.

இந்த நடவடிக்கை வாக்காளர்களின் விருப்பத்தைப் பலவீனப்படுத்துகிறது எனவும் Conservative தலைவர் குறிப்பிட்டார்.

கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற Marilyn Gladu-வின் முந்தைய கருத்துக்களைச் சுட்டிக்காட்டிய  Pierre Poilievre, அந்த நிலைப்பாட்டுடன் தான் உடன்படுவதாகவும் கூறினார்.

கடந்த மாதங்களில் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont, Toronto பெரும்பாக நாடாளுமன்ற உறுப்பினர் Michael Ma, Edmonton நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux ஆகியோர் Conservative கட்சியில் இருந்து விலகி ஆளும் Liberal அரசில் இணைந்தனர்.

கடந்த மாதம், பிரதமர் Mark Carney, Nunavut தொகுதியின் பிரதிநிதியான முன்னாள் NDP நாடாளுமன்ற உறுப்பினர்  Lori Idlout-டையும் தனது கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கடந்த வருடம் நடந்த பொதுத் தேர்தலில் இருந்து, Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான 172 ஆசனங்கள் என்ற வரம்பை ஒட்டியே இருந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் சிலர் தூதரகப் பதவிகளை ஏற்றுக் கொண்டு தங்கள் பதவிகளில் இருந்து விலகிய போதிலும், November மாதம் முதல் கட்சி மாறியவர்களின் தொடர்ச்சியான வருகையால் Liberal கட்சி அந்த இடைவெளியை ஈடு செய்து, புதன்கிழமை நிலவரப்படி 171 ஆசனங்களை கொண்டுள்ளது .

சபாநாயகர் ஒரு Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், Mark Carney அரசாங்கம் 173 ஆசனங்களைப் பெற்றால், சபையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (13) மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் Toronto-வில் உள்ள தங்களின் கோட்டையான University-Rosedale, Scarborough தென்மேற்கு ஆகிய தொகுதிகளை Liberal கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Liberal கட்சி இந்த மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் இலகுவாக பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவசர காலச் சட்ட பிரேரணை

Lankathas Pathmanathan

புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களுக்கு இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment