தேசியம்
செய்திகள்

Ontario மாகாண பற்றாக்குறை இரட்டிப்பானது

Ontario மாகாணத்தின் பற்றாக்குறை இரட்டிப்பாகி உள்ளது.

Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (26) சமர்ப்பிக்கப்பட்டது.

Doug Ford அரசாங்கம் $244.2 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

Ontario மாகாண நிதியமைச்சர் Peter Bethlenfalvy இந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்

$244.2 பில்லியன் மதிப்பிலான இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரப் பராமரிப்புக்கு $101.2 பில்லியன், கல்விக்கு $40.8 பில்லியன், மேல்நிலைக் கல்வித் துறைக்கு 14 பில்லியன் நிதி அறிவிக்கப்படுள்ளது.

தொடர்ந்து நிலவும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், 2026-2027 ஆம் ஆண்டில் $13.8 பில்லியன் பற்றாக்குறையை Peter Bethlenfalvy அறிவித்தார்.

இது கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்குக் கணிக்கப்பட்ட $7.8 பில்லியன் பற்றாக்குறையை விட அதிகமாகும்.

2027-28 ஆம் ஆண்டில் $6.1 பில்லியன் என்ற பெரிய பற்றாக்குறையும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2028-28 ஆம் ஆண்டுக்குள் வரவு செலவுத் திட்டம் சம நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக Peter Bethlenfalvy கூறினார்.

எம்மைச் சுற்றியுள்ள உலகில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது என நிதி அமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றியபோது கூறினார்.

இந்த வரவு செலவுத் திட்டம் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என மாகாணத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி கூறியுள்ளது.

Ontario-வின் முன்னுரிமைகளை பூர்த்தி செய்வதற்கான சோதனையில் இந்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது என NDP தலைவர் Marit Stiles கூறினார்.

Ontario மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை எதுவும் செய்யவில்லை எனவும் NDP கூறியது.

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவர் John Fraser இந்த கருத்தை எதிரொலித்தார்.

Related posts

வதிவிட பாடசாலைகளில் கனடாவின்பங்கு குறித்து  விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்: முதல்வர் Ford

Gaya Raja

பணவீக்க விகிதம் மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment