புதிய NDP தலைவராக Avi Lewis தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Winnipeg நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் Avi Lewis வெற்றியாளராக ஞாயிற்றுக்கிழமை (29) அறிவிக்கப்பட்டார் .
தலைமைப் பதவிக்கான போட்டியில் அவர் 56 சதவீதம் வாக்குகளை பெற்றார்.
கடந்த பொதுத் தேர்தல் தோல்வியுடன் NDP தலைமை பதவியில் இருந்து Jagmeet Singh விலகியிருந்தார்.
Jagmeet Singh தனது சொந்தத் தொகுதியில் வெற்றி பெறத் தவறி பதவி விலகினார்.
இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை ஆரம்பமானது.
Rob Ashton, Tanille Johnston, Avi Lewis, Heather McPherson, Tony McQuail ஆகிய ஐந்து வேட்பாளர்கள் அடுத்த NDP தலைவராக தேர்ந்தெடுக்கும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் Avi Lewis வெற்றிபெற, Heather McPherson 29 சதவீதமான வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
NDP உறுப்பினர்கள் March 09 முதல் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இணையம் மூலமும், அஞ்சல் மூலமாகவும் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் 100,000 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என கட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் 39,734 பேர் Avi Lewis-க்கு ஆதரவாக வாக்களித்தனர்
கடந்த தேர்தலில் ஏற்பட்ட பேரழிவுகரமான தோல்வியைத் தொடர்ந்து NDP மீண்டும் தன்னை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.
இந்த நிலையில் புதிய தலைவராக Avi Lewis தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளா ர்.
கடந்த தேர்தலில் NDP அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை இழந்தது.
ஏழு வேட்பாளர்கள் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
