தேசியம்
செய்திகள்

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Conservative தலைவர் Erin O’Toole தலைமை மதிப்பாய்வு குறித்த வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்கிறார்.

Saskatchewan மாகாண Senator Denise Batters முன்வைத்துள்ள மனு, O’Tooleலை தலைமை மதிப்பாய்வை எதிர்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது.

இது Conservative தலைவரை வெளியேற்றுவதற்கான ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

O’Toole தலைமை மதிப்பாய்வை கட்சியின் 2023 மாநாட்டிற்கு முன்னதாக நடத்தக் கோரும் ஒரு மனுவை திங்கட்கிழமை Senator Batters முன்வைத்தார்.

அவரது மனுவானது ஏமாற்றமளிக்கும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் O’Toole கட்சியின் தலைமையில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், Senatorகள், தற்போதைய மற்றும் முன்னாள் கட்சி நிர்வாகிகளின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

ஆனாலும் இந்த மனு அனுப்பப்பட்ட சில மணிநேரங்களுக்குள், Battersசின் முன்மொழிவு கட்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Senator Batters எடுக்கும் முயற்சி கட்சியின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என Conservative கட்சியின் தலைவர் Rob Batherson குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் Stephen Harperரினால் Senatorராக நியமிக்கப்பட்ட Batters, முன்னாள் தலைவர் Andrew Scheerக்கு நெருக்கமானவர் என்பதும் கடந்த வருடம் கட்சியின் தலைமைப் போட்டியில் Peter MacKayயை ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario Liberal தலைவர் தோல்வி!

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் கனடா!

Gaya Raja

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment