December 11, 2023
தேசியம்
செய்திகள்

British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் விசாரணையை ஆரம்பிக்கும் RCMP

215 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னாள் தலைவர் Murray Sinclair வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டார். இந்த விசாரணையில் RCMPயின் ஆரம்பகால தந்திரங்களை வழக்கமான கனமான அணுகுமுறை என அவர் விமர்சித்தார்.

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தகவல் வெளியிட்டவர்களை RCMP விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் என கூறிய Sinclair, அவர்கள் மக்களுக்கு உதவுவதை விட  மக்களை அச்சுறுத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இதுபோன்ற புதைகுழிகளை அடையாளம் காண சுயாதீன விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அரசாங்கத் துறையின் எல்லைக்கு வெளியே ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்  

ஏற்கனவே குடியிருப்புப் பாடசாலைகளில் இறந்த குழந்தைகளை கண்டுபிடித்து நினைவுகூருவதில் பழங்குடி சமூகங்களுக்கு உதவுவதற்காக 27 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசாங்கம் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது 

Related posts

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளது?

Lankathas Pathmanathan

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!