தேசியம்
செய்திகள்

2022 குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை கனடா எடுக்க வேண்டும்!

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர்  அடுத்த ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான  Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole பிரதமர் Justin Trudeauவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் தனது நேரத்தை அடுத்த குளிர்கால ஒலிம்பிக்கை பெய்ஜிங்கில் இருந்து மாற்றுவதில்  செலவு செய்யவேண்டும் என O’Toole கோரியுள்ளார்.

கம்யூனிஸ்ட் சீன ஆட்சி முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்த்து நிற்கும் வழிகளில் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை O’Toole தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது கனடா தனது விளையாட்டு வீரர்களை சீனாவிற்கு அனுப்பக்கூடாது எனவும் கூறிய O’Toole இரண்டு கனடியர்களை சீன தொடர்ந்து தடுத்து  வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Related posts

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Gaya Raja

சர்வதேச வர்த்தக அமைச்சர் குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை

Lankathas Pathmanathan

Ottawa போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!