தேசியம்
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் கனடாவில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம் ஒன்று கனடாவில் நடைபெற்றது.

தமிழர்கள் அதிக அளவில் வாழும் Toronto நகரில் ஞாயிற்றுக்கிழமை (04) இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

76 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இன அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கோரியும் , பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Torontoவில் ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திர தின கொண்டாட்டம் நிகழ்ந்த மண்டபத்திற்கு முன்பாக இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற வாகனப் பேரணி Torontoவில் Morningside வீதியில் அமைந்துள்ள கனடிய தமிழர் பேரவையின் (CTC) அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது.

இமாலய பிரகடனத்தை எதிர்க்கும் வகையில் CTC அலுவலகத்திற்கு முன்பு திரண்ட தமிழர்களுக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

அதன் பின்னர் ஆரம்பமான வாகனப் பேரணி ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திர தின கொண்டாட்டம் நிகழ்ந்த மண்டபத்திற்கு வெளியே நிறைவுக்கு வந்தது.

Related posts

கனடாவில் சீன அதிகாரிகளால் நடத்தப்படும் மேலும் இரண்டு காவல் நிலையங்கள்?

Lankathas Pathmanathan

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan

இந்த மாத இறுதியில் Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja

Leave a Comment