தேசியம்
செய்திகள்

கனடாவில் சீன அதிகாரிகளால் நடத்தப்படும் மேலும் இரண்டு காவல் நிலையங்கள்?

கனடாவில் சீன அதிகாரிகளால் நடத்தப்படும் மேலும் இரண்டு காவல் நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

உலகெங்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 50 வரையிலான மேலதிக சீன காவல் நிலையங்களில் இரண்டு கனடாவில் இயக்குவதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்தது.

Toronto பெரும்பாகத்தில் முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று காவல் நிலையங்களை தவிர Vancouver நகரில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு காவல் நிலையங்கள் குறித்த விபரங்கள் திங்கட்கிழமை (05) வெளியாகியுள்ளன.

இந்த காவல் நிலையங்கள் குறித்து விசாரித்து வருவதாக RCMP தெரிவித்துள்ளது.

கனடாவில் இயங்குவதாக கூறப்படும் இரகசிய காவல் நிலையங்கள் குறித்து விளக்கமளிக்க கனடிய வெளிவிவகார அமைச்சு கனடாவுக்கான சீனாவின் தூதரை பலமுறை அழைத்துள்ளது என கடந்த வாரம் தெரியவந்தது.

ஆனாலும் சீன குடிமக்களுக்கு உதவவே இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என சீன மக்கள் குடியரசின் துணைத் தூதரகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடுமையான பயண நடவடிக்கைகள்: மத்திய அரசு ஆலோசனை

Lankathas Pathmanathan

Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்தது Chandra Arya விலத்தல்?

Lankathas Pathmanathan

உக்ரைன் யுத்தம் அமெரிக்க – கனடிய தலைவர்கள் உரையாடல்?

Lankathas Pathmanathan

Leave a Comment