இரண்டாவது மூத்த இராணுவ உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் கனேடிய ஆயுதப்படைகளின் பிரிகேடியர் ஜெனரல் Simon Bernard தடுப்பூசி விநியோகத்தில் தனது பங்கிலிருந்து அமைதியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் மொழி குறித்த புகார் ஒன்றை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
கனேடிய ஆயுதப்படையினர் இந்த பதவி விலத்தலை உறுதிப்படுத்திய போதிலும் மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. தடுப்பூசி விநியோகத்தில் இரண்டாவது கட்டளையிடும் பொறுப்பில் பிரிகேடியர் ஜெனரல் Bernard கடந்த ஆண்டு November மாதம் நியமிக்கப்பட்டார்.