தேசியம்
செய்திகள்

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

August மாதத்தின் இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது.

பிரதமர்  Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். இதன் மூலம் கனடா July மாதத்தில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளையும் August மாதத்தில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளையும் பெறவுள்ளது.

September மாதத்தில் மேலும் மூன்று மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்கான உறுதிப்பாட்டையும் கனடா பெற்றுள்ளது. இவை ஏனைய தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்கும் விநியோகத்தை விட மேலதிகமானவை என பிரதமர் உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் தடுப்பூசி பெற விரும்பும் எவரும் September மாத இறுதிக்குள் ஒரு தடுப்பூசியை பெறுவார்கள் என  அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது. இதுவரை தகுதிவாய்ந்த கனேடியர்களில் 65 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை குறைந்தபட்சம் பெற்றுள்ளனர் .

Related posts

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!