September 27, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய இராணுவ உதவிக்கான எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை: Mark Carney

ஈரான் மோதலில் கனடா ஈடுபடவில்லை என கனடிய பிரதமர் மீண்டும் கூறினார்.

கனடிய இராணுவ உதவிக்கான எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் Mark Carney தெரிவித்தார்.

அத்தகைய கோரிக்கைகளை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள கனடிய பிரதமர் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது சனிக்கிழமை (07) கூறினார்.

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களைத் ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு மோதலில் கனடா ஈடுபடவில்லை என Mark Carney கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த மோதலின் விளைவுகள் சமாளிப்பது கனடாவின் பிரதான கவனமாக உள்ளது என அவர் கூறினார்

இந்த விளைவுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் கனடா வரையிலும் பரவி வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்தில் 108,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்துள்ளனர்.

அங்கிருந்து வெளியேற தூதரக உதவியை நாடும் கனடியர்களின் எண்ணிக்கை 3,500 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கனடியர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக தரைவழிப் போக்குவரத்து  ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும், விமான பயண ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

இந்த யுத்தம் காரணமாக கனடாவில் எரிபொருளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

Related posts

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

NDP-யின் இடைக்கால தலைவராக Don Davies தெரிவு

Lankathas Pathmanathan

பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கும் கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment