தேசியம்
செய்திகள்

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: மற்றொரு Liberal அமைச்சர் அறிவிப்பு

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என தொழில்துறை அமைச்சர் Steven MacKinnon தெரிவித்துள்ளார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் Steven MacKinnon பெயரும் அடங்கியிருந்தது.
ஆனாலும் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை Steven MacKinnon ஞாயிற்றுக்கிழமை (12) அறிவித்தார்.
தனது அமைச்சர் பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், பிரதமர் பதவியை யார் ஏற்க வேண்டும் என்பது குறித்த தனது நிபுணத்துவ அனுபவித்த வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ள நிலையில் அவரது இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan

ArriveCAN செயலி தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பிரதமருக்கு 2021 முதல் ஐந்து முறை விளக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment