September 27, 2026
தேசியம்
செய்திகள்

Paralympic போட்டிகளின் முதல் நாளில் கனடாவுக்கு மூன்று பதக்கங்கள்

Paralympic போட்டிகளில் முதல் நாளில் கனடா மூன்று பதக்கங்களை வென்றது.

2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) ஆரம்பித்தன.

இதில் கனடா முதலாவது முழுநாள் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றது.

ஆண்களுக்கான alpine downhill skiing போட்டியில் British Colombia மாகாணத்தைச் சேர்ந்த Kalle Eriksson, தனது வழிகாட்டி Sierra Smith உடன் வெள்ளிப்பதாக்கத்தை வென்றார்.

இது 2026 Paralympic போட்டிகளில் கனடாவின் முதலாவது புதக்கமாகும்.

Calgary நகரைச் சேர்ந்த Kurt Oatway, ஆண்களுக்கான downhill sitting ski போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் கனடாவுக்காக இரண்டு பதக்கங்களைப் பெற்றார்.

தொடர்ந்து British Colombia மாகாணத்தைச் சேர்ந்த Para Nordic நட்சத்திரம் Natalie Wilkie பெண்களுக்கான standing sprint biathlon போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவர் தனது மூன்றாவது Paralympics போட்டியில் வெற்றி பெறும் எட்டாவது பதக்கம் இதுவாகும்.

இந்த நிலையில் முதலாவது நாள் இறுதியில் கனடா இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த Paralympic போட்டிகள் 15-ஆம் திகதிவரை நடைபெறுகின்றன.

Related posts

கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

RCMP அதிகாரியை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்: Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment