September 27, 2026
தேசியம்
செய்திகள்

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர் விரிவடைந்து வரும் நிலையில், அங்கிருந்து வெளியேற தூதரக உதவியை நாடும் கனடியர்களின் எண்ணிக்கை 3,500 ஆக அதிகரிதுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 2,000 ஆக இருந்தது.

இந்தப் பிராந்தியத்தில் 108,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் உள்ளதாக் கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கனடியர்களை அங்கிருந்து வெளியேற்ற உதவ கனடிய இராணுவத்தை உதவிக்கு அழைக்கவில்லை என அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

அதற்கு பதிலாக, வெளியேற விரும்பும் கனடியர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக தரைவழிப்போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும், விமான பயண ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

உதவி கோரும் பெரும்பாலான கனடியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Ontarioவில் தட்டம்மை – measles – எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Titan நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்கள் குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணை!

Lankathas Pathmanathan

Leave a Comment