தேசியம்
செய்திகள்

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

அமெரிக்க எல்லை திறந்த பின்னர் கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது.

அமெரிக்காவுடன் நில எல்லையில் கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை எல்லை திறந்த பின்னர் முதல் வாரத்தில் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

218,732 வணிகரல்லாத பயணிகள் August 9 முதல் August 15 வரையிலான காலப்பகுதியில் எல்லையை கடந்துள்ளதாக CBSA தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 103,344ஆக பதிவானது.

கனேடிய அமெரிக்க எல்லை கடந்த வருடம் March மாதம் முதல் அத்தியாவசியமற்ற பயணத்திற்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க வரி February 1 நடைமுறைக்கு வரும்: வெள்ளை மாளிகை

Lankathas Pathmanathan

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

மூன்று போராட்டங்கள் – காவல்துறை அதிகாரி காயம் – மூன்று பேர் கைது – காவல்துறை அதிகாரி கைது

Lankathas Pathmanathan

Leave a Comment