September 7, 2026
தேசியம்
செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: கனடிய எதிர்க்கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள்

ஈரானை குறிவைக்கும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை குறித்து கனடாவின் பிரதான எதிர்க் கட் சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.

ஈரானின் இராணுவ சர்வாதிகாரத்தை அகற்றும் இந்தத் தாத்குதல் முயற்சியை ஆதரிப்பதாக Conservative ட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏனைய பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து தங்கள் இறையாண்மையை பாதுகாக்க முன்னெடுக்கும் இந்தத் தாக்குதலை ஆதரிப்பதாக Pierre Poilievre கூறினார்.

உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு முக்கிய காரணியாக ஈரான் விளக்குவதாக அவர் கூறினார்.

மாறாக இந்தத் தாக்குதலை புதிய ஜனநாயக கட்சி கண்டித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக NDP வெளியுறவு விமர்சகர் Alexandre Boulerice கூறினார்.

இந்த் தாக்குதல் முழு பிராந்தியத்தையும் ஒரு பெரிய மோதலுக்கு இழுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.

கனடிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஆதரிக்க எடுத்த முடிவைவு குறித்து NDP வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈரானை குறிவைக்கும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை ஆதரிப்பதாக கனடிய பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குலை ஆதரிக்கும் கனடா – தேசியம்

Related posts

பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை வாகனத்தால் தாக்க முனைந்தவர் கைது

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் ஐந்தாவது தமிழர்!

Lankathas Pathmanathan

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

Leave a Comment