தேசியம்
செய்திகள்

விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்துள்ளனர்

COVID பரவலின் மத்தியில் பயணங்களுக்கான திட்டங்களை இரத்து செய்யுமாறு கனடியர்களை பிரதமர் மீண்டும் கோரியுள்ளார்.

கடந்த நத்தார், புதுவருட விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்ததாக தரவுகள் வெளியான நிலையில் இந்தக் கோரிக்கையை பிரதமர் Justin Trudeau விடுத்துள்ளார். Cell Phone தரவைப் பகுப்பாய்வு செய்த பின்னர், விடுமுறை நாட்களில் 1.2 மில்லியன கனடியர்கள் பயணம் செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணம் தொடர்பாக மத்திய பொது சுகாதார வழிகாட்டுதல் மாறவில்லை என்பதையும் பிரதமர் Trudeau மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூர், மாகாண, மத்திய மட்டத்திலான சுகாதார அதிகாரிகள், இந்த நேரத்தில் விடுமுறை பயணத்துக்கு எதிராக பலமுறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் வட்டி  விகிதம்?

Lankathas Pathmanathan

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!