தேசியம்
செய்திகள்

மத்திய கிழக்கு மோதலில் கனடிய இராணுவத்தின் பங்கேற்பு இல்லை: Mark Carney

மத்திய கிழக்கு மோதலில் கனடிய இராணுவத்தின் பங்கேற்பை பிரதமர்  Mark Carney நிராகரித்தார்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.

இந்தத் தாக்குதலிலோ அல்லது இதன் இராணுவத் திட்டமிடலிலோ கனடா எந்தக் கட்டத்திலும் எந்தவகையிலும் பங்கேற்கவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

சமீபத்திய வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடியபோது ஈரானில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உரையாடியதாக Mark Carney கூறினார்.

எதிர்வரும் காலத்திலும் கனடாவின் பங்கு இதில் இருக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கனடிய பிரதமர் கூறினார்.

இதில் பொதுமக்கள் உயிர்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கு அரச முறை பயணம் முன்னெடுத்துள்ள Mark Carney மும்பையில் வைத்து இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துவது குறித்தும் Mark Carney கருத்துத் தெரிவித்தார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குலை ஆதரிக்கும் கனடா – தேசியம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: கனடிய எதிர்க்கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் – தேசியம்

Related posts

Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்தை இழந்த தமிழர்கள்!

Lankathas Pathmanathan

காசாவில் நிலையான போர் நிறுத்தத்திற்கு கனடிய  பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடை

Gaya Raja

Leave a Comment