September 27, 2026
தேசியம்
செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குலை ஆதரிக்கும் கனடா

ஈரானை குறிவைக்கும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை கனடா ஆதரிக்கிறது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையை ஆதரிப்பதாக கனடிய பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்தனர்.

பிரதமர் Mark Carney, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் கூட்டாக அறிக்கை. ஒன்றை வெளியிட்டனர்.

இந்தத் தாக்குதல் மூலம் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என கனடா தெரிவித்தது.

“மத்திய கிழக்கு முழுவதும் உறுதியற்ற தன்மை ஏற்படவும், பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் இஸ்லாமிய குடியரசு இருப்பதாக கனடா நம்புகிறது கனடிய அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்கவும், அதன் ஆட்சி சர்வதேச அமைதி, பாதுகாப்பை மேலும் அச்சுறுத்துவதை தடுக்கவும் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிப்பதாக கனடிய அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கை, கனடா ஏற்கனவே 256 ஈரானிய நிறுவனங்கள், 222 தனிநபர்களுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறது.

Related posts

2024 Paris Olympics: கனடாவின் இருபத்தி இரண்டாவது பதக்கம்!

Lankathas Pathmanathan

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Leave a Comment