தேசியம்
செய்திகள்

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என எதிர்பார்க்கிறேன்: Mark Carney

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

Alberta பிரிவினைவாதக் குழுவின் உறுப்பினர்களுக்கும், Donald Trump நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு நடந்ததாக Financial Times செய்தி வெளியிட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் கனடிய பிரதமரின் கருத்து வெளியானது.

Ottawa-வில் Mark Carney கனடாவின் மாகாண முதல்வர்களை வியாழக்கிழமை (29) சந்தித்தார்.

ஒன்றிணைத்து கனடாவை கட்டியெழுப்புவதற்கான வழிகளைக் கண்டறிவது குறித்த இந்த சந்திப்பில் விவாதித்தாக பிரதமர் கூறினார்.

Quebec, Alberta ஆகிய மாகாணங்களில் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney, அமெரிக்கா எப்போதும் “கனடாவின் இறையாண்மையை மதிக்கும்” என தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

கனடாவுடன் இணைந்து வாழ்வதையே Quebec மக்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதாக தெரிவித்த பதவி விலகிச் செல்லும் மாகாண முதல்வர் François Legault, அதை உறுதிப்படுத்த வேண்டியது அவர்களின் விருப்பம் எனவும் கூறினார்.

இந்த இலையுதிர் காலத்தில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் Quebec-கில்  ஒரு பிரிவினைவாத அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது கனடாவிற்கு ஒரு “பேரழிவாக” அமையும் என Ontario முதல்வர் Doug Ford மீண்டும் வலியுறுத்தினார்.

LJI Reporter ரம்யா சேது

 

Related posts

கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

பெரும் சக்திகளுக்கு இடையே போட்டி நிலவும் உலகில், நடுத்தர சக்திகளுக்கு ஒரு தேர்வு உள்ளது: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் Mark Carney

Lankathas Pathmanathan

Quebecகில் தொடரும் காட்டுத்தீ எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment