தேசியம்
செய்திகள்

ஒன்றுபட்ட கனடாவுக்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பேன்: Pierre Poilievre

Alberta மாகாணத்தை கனடாவுடன் இணைத்து வைத்திருக்கும் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளதாக Conservative கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Alberta கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர வேண்டுமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நெருங்கி வரும் நிலையில் இந்தக் கருத்தை Pierre Poilievre முன்வைத்தார்.

ஒரு ஒன்றுபட்ட கனடாவை தான் ஆதரிப்பதாக கூறிய அவர்,  இதற்காக தினமும் அனைத்து வழிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வோம் என கூறினார்.

கனடாவில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து Alberta பொது வாக்கெடுப்பு ஒன்றை October 19-ஆம் திகதி நடத்த உள்ளது.

இந்த நிலையில் தனது சொந்த மாகாண மக்களை கனடாவில் இணைந்து இருக்குமாறு ஊக்குவித்து, மாகாணம் முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளதாக  Pierre Poilievre வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

Alberta கனடாவுடன் இணைந்திருப்பதை தான் ஆதரிப்பதாக அந்த மாகாண முதல்வர் Danielle Smith கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Lankathas Pathmanathan

வைத்தியசாலை பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் NDP தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment