September 24, 2026
தேசியம்
செய்திகள்

தலைமைத்துவ வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா Pierre Poilievre?

Conservative தலைவர் Pierre Poilievre தனது தலைமைத்துவம் குறித்த வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை (30) எதிர்கொள்கிறார்.

Calgary நகரில் நடைபெறும் Conservative கட்சி மாநாட்டில், Pierre Poilievre தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து கட்சி பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர்.

இது தேர்தல் தோல்வியின் பின்னர் முன்னெடுக்கப்படும் Conservative கட்சி மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும்.

கடந்த April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Pierre Poilievre தலைமயிலான Conservative கடசி தோல்வியடைந்த நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த வாக்கெடுப்பில் Pierre Poilievre-ருக்கு பரந்த ஆதரவு இருப்பதாகவும், அவர் இந்தத் தலைமைத்துவ மதிப்பாய்வை எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த மாநாட்டில், அவரது தலைமைத்துவ மதிப்பாய்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை Pierre Poilievre பெறுவது வெற்றியாகக் கருதப்படும்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடிய நாடாளுமன்றம், தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் கடந்த வாரம் 96 COVID மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment