ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விருந்தை Quebec மாகாண புதிய முதல்வர் புறக்கணித்ததாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றிய தூது குழுவினருக்கு கனடிய மத்திய அரசு அளித்த அதிகாரப்பூர்வ சிறப்பு இரவு விருந்தில், புதிய Quebec மாகாண முதல்வர் Paul St-Pierre Plamondon பங்கேற்க மறுத்ததாக Mark Carney தெரிவித்தார்.
இந்த விருந்திற்கு அழைப்பு விடுத்தும் அதில் பங்கேற்ற Paul St-Pierre Plamondon மறுத்துவிட்டார் என Mark Carney தெரிவித்தார்.
கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே அடுத்த ஆண்டு உறைவிட உறுப்பினர் விபரங்களை இறுதி செய்வது குறித்த மிக முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி தலைநகரில் உயர்மட்ட விருந்து நிகழ்வு நடைபெற்றது.
இந்த விருந்தை Quebec மாகாண புதிய முதல்வர் புறக்கணித்ததாக Mark Carney குற்றம் சாட்டினார்.
அவர் திட்டமிட்டே இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என பிரதமர் Mark Carney செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த குற்றச்சாட்டுக்கு Quebec மாகாணத்தின் PQ அரச தரப்பு உடனடியாக மறுப்புத் தெரிவித்தது.
தமது மாகாண தன்னாட்சியை காக்க இந்த விருந்தைத் தவிர்க்க நேரிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் Mark Carney, Quebec மாகாண புதிய முதல்வர் Paul St-Pierre Plamondon ஆகிய இருவருக்கும் இடையே புதிய இராஜதந்திர வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
