கனடா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் “வரம்புக்குட்பட்ட முன்னேற்றமே” ஏற்பட்டுள்ளதாகக் கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடாவின் நிலைப்பாட்டை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது எனப் பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்திருந்த சில மணி நேரங்களில் இந்தக் கருத்து வெளியானது.
கனடா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தற்போதைக்கு மிக “வரம்புக்குட்பட்ட முன்னேற்றமே” ஏற்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத கனடிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Donald Trump நிர்வாகத்திடமிருந்து தொடர்ந்து முரண்பட்ட நிலைப்பாடுகள் வெளியாகி வருவதால் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதில் இன்னும் முழுமையான தெளிவு பிறக்கவில்லை என அவர் கூறினார்.
Alberta பொதுவாக்கெடுப்பு அமைதியாக முடிந்ததை தொடர்ந்து, கடந்த வாரம் Mark Carney – Donald Trump இடையே நடந்த நீண்ட தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்தன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் அழுத்தம் அமெரிக்காவின் இந்த நிலை மாற்றத்தின் காரணியாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் November 3 அன்று நடைபெற உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
