Moroccoவிலிருந்து நேரடி பயணிகள் விமானங்களை கனடா நிறுத்தி வைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், Moroccoவிலிருந்து கனடா வரும் அனைத்து நேரடி பயணிகள் விமானங்களும் நிறுத்தப்படும்.
COVID தொற்றின் பரவலின் அதிக ஆபத்தை மேற்கோள் காட்டி.
போக்குவரத்து கனடா சனிக்கிழமை இந்த முடிவை அறிவித்தது.
இந்தத் தடை 30 நாட்களுக்கு இருக்கும் எனவும் September மாதம் 29ஆம் திகதியன்று நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கான நீட்டிப்பு சாத்தியம் எனவும் தெரியவருகிறது.
சரக்கு ஏற்றுமதி, மருத்துவ இடமாற்றங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் இந்தத் தடையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் Moroccoவிலிருந்து கனடாவுக்கு வேற்றுப் பாதையில் பயணிக்க விரும்பும் பயணிகள் கனடாவுக்குச் வருவதற்கு முன்னர், Moroccoவைத் தவிர வேறு மூன்றாம் நாட்டிலிருந்து புறப்படும் முன் எதிர்மறை COVID மூலக்கூறு சோதனை பெற வேண்டும்.
கனடிய அரசின் கண்காணிப்பு தரவுத் தளத்தின்படி, August 13 முதல் Moroccoவில் உள்ள
Casablancaவிலிருந்து குறைந்தது 26 விமானங்கள் Montrealலில் தரையிறங்கியுள்ளன.