தேசியம்
செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் Ontarioவின் தொற்று எண்ணிக்கை!

June மாதம் 4ஆம் திகதிக்கு பின்னரான அதிக ஒற்றை நாள் COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை சனிக்கிழமை  Ontario பதிவு செய்தது.

மாகாண சுகாதார அதிகாரிகள் 35 புதிய தொற்றுக்களை  பதிவு செய்தனர்.

இன்று பதிவான தொற்றுக்களில் 675 பேர் முழுமையாக தடுப்பூசி பெறவில்லை எனவும் 160 பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

Ontarioவில் வெள்ளிக்கிழமை 781 தொற்றுக்களும் ஒரு வாரத்திற்கு முன்னர் 689 தொற்றுக்களும் பதிவாகின.

இதன் மூலம் தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரிக்கிறது.

ஒரு வாரத்திற்கு முன்னர் 534 ஆக இருந்த ஏழு நாள் சராசரி சனிக்கிழமை 686 ஆக அதிகரித்துள்ளது. Ontario சனிக்கிழமை 7 மரணங்களையும் பதிவு செய்தது.

ஆனால் அதில் 6 உயிரிழப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தன.Ontarioவில் இதுவரை 12 வயதும் அதற்கு மேற்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

76 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசியையும்  பெற்றுக்கொண்டுள்ளனர்.

Related posts

பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது

Lankathas Pathmanathan

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

கொலை வழக்கில் தமிழருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment