தேசியம்
செய்திகள்

கனடா – சீனா ஒப்பந்தம் குறித்த கருத்துக்கள்

கனடிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் எட்டியுள்ள ஒப்பந்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கனடாவில் தெரிவிக்கப்படுகின்றன.

சீன அரசாங்கத்துடன் tariffs கட்டணங்களை குறைக்க Liberal அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

சீனா விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பதற்கு ஈடாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளைக் குறைக்க கனடிய அரசாங்கம் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை Saskatchewan முதல்வர் Scott Moe பாராட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் கனடிய பொருளாதாரம் முன்னோக்கி நகர்வதற்கு ஆதரவாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சீன மின்சார வாகனங்கள் மீதான வரிகளை குறைக்குமாறு கனடிய மத்திய அரசிடம் Alberta, Saskatchewan, Manitoba மாகாண முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நகர்வு கனடிய விவசாயப் பொருட்கள் மீதான வரிகளைத் தளர்த்துவதாக சீனா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அமையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதேவேளை Ontario முதல்வர் கனடிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் எட்டியுள்ள ஒப்பந்தத்தை கண்டித்துள்ளார்.

சீனாவுடனான இந்த ஒப்பந்தம் கனடிய பிரதமரின் தவறான முடிவாகும் என Doug Ford தெரிவித்தார்.

எங்கள் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவை விட குறைந்த கட்டணங்கள் கொண்ட ஒரு சந்தையில் சீனாவை நாங்கள் அனுமதிப்பது கனடாவுக்கு சாதகமாக இருக்கும் என தான் நம்பவில்லை என செய்தியாளர்களிடம் Doug Ford கூறினார்.

இந்த நிலையில் கனடாவின் வாகனத் துறை இந்த ஒப்பந்தம் குறித்து தெளிவைக் கோருகின்றன.

இந்த அறிவிப்புக்கு முன்னர் தனது நிறுவனத்துடன் கலந்தாலோசிக்கப்பட வில்லை என கனடாவின் உலகளாவிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான David Adams கூறினார்.

சீனாவிலிருந்து திரும்பிய பின்னர், அரசாங்க அதிகாரிகளுடன் முழுமையான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து தான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக Unifor தேசியத் தலைவர் Lana Payne தெரிவித்தார்.

கனடிய வாகனத் துறை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் மிகவும் ஆபத்தானது என அவர் கூறினார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Manitoba மோசமான பனிப்புயலை எதிர்கொள்கிறது

Lankathas Pathmanathan

இரண்டு ஆண்டுகளுக்கு இல்லாத நிலைக்கு சரிந்த பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan

இத்தாலி பயணமாகும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment