தேசியம்
செய்திகள்

சீனாவுடன் ஒப்பந்தம் குறித்து கனடா முன்னதாகவே அமெரிக்காவுக்கு அறிவித்தது? 

சீன மின்சார வாகனங்கள் மீதான கட்டணங்களை குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் முன்னதாகவே அமெரிக்க நிர்வாகத்திற்கு அறிவித்ததாக தெரியவருகிறது.

சீனா விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பதற்கு ஈடாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளைக் குறைக்க கனடிய அரசாங்கம் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை கடந்த வாரம் எட்டியது.

அமெரிக்காவுக்கான கனடிய தூதர் Kristen Hillman, சீனாவுடனான ஒப்பந்தம் குறித்து அறிந்திருந்ததாகவும், இது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் உரையாடியதாவும் கனடிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

குறிப்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer-க்கு இந்த விடயம் கனடிய அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Pearson விமான நிலைய விபத்தில் 18 பேர் காயம்!

Lankathas Pathmanathan

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை – CTC அறிக்கை!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment