தேசியம்
செய்திகள்

Toronto DVP நெடுஞ்சாலை மூடப்படும்: பெரும் தீ விபத்தில் சிதைந்த கட்டடத்தை இடிக்க மாநகராட்சி முடிவு?

Toronto கிழக்குப் பகுதியில் புதன்கிழமை (14) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் ஒன்று இடிக்கப்படவுள்ளது.

இதற்காக, Toronto-வின் முக்கிய நெடுஞ்சாலையான Don Valley Parkway – DVP  வடக்கு நோக்கிய பாதைகள் வியாழக்கிழமை (15) இரவு மூடப்படவுள்ளன.

பொதுமக்கள், இடிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருதி Toronto மாநகராட்சி இந்த அவசர முடிவை எடுத்துள்ளது.

இரவு 7:30 மணி முதல் வெள்ளிக்கிழமை (16) காலை 6:00 மணி வரை DVP நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

இதில் Gardiner Expressway நுழைவாயில் முதல் Dundas Street வரையிலான DVP பகுதி மூடப்படுகிறது. நெடுஞ்சாலை மட்டுமின்றி, அதனை இணைக்கும் Don Roadway, Eastern Avenue, Queen Street ஆகியவற்றுக்கான நெடுஞ்சாலைக்குள் ஏறும் பாதைகள் முற்றிலும் மூடப்பட உள்ளன.

புதன் இரவு சுமார் 9:30 மணியளவில் கைவிடப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கட்டடம் DVP நெடுஞ்சாலையின் அருகில் இருந்து வெறும் 30 அடி தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது.

தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், இது மூன்றாம் நிலை தீ விபத்தாக அறிவிக்கப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர்  தீயணைப்பு வீரர்களால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தின் போது பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கட்டடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல்  இருந்துள்ளது.

எனினும், தீ விபத்து ஏற்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாகத் Toronto காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து Toronto தீயணைப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவும், காவல்துறையும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் விசாரணை தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Related posts

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

இங்கிலாந்தின் கனேடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார்

Gaya Raja

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment