Alberta பொது வாக்கெடுப்புக்கு $84 மில்லியன் செலவாகியுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Alberta பொது வாக்கெடுப்பு கடந்த மாதம் 19-ஆம் திகதி நடைபெற்றது,
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவாக்கெடுப்புத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒட்டுமொத்தமாக $84 மில்லியன் செலவாகியுள்ளதாக Alberta தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இந்தத் தேர்தலில் வாக்குகள் கைகளால் எண்ணப்பட்டன.
Alberta முதல்வர் Danielle Smith அரசு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை விதித்திருந்ததால், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளும் ஊழியர்களின் கைகளால் மட்டுமே எண்ணப்பட்டு முறைப்படுத்தப்பட்டன.
5 குடியேற்றக் கட்டுப்பாடுகள், 4 அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் என மொத்தம் 9 வெவ்வேறான கேள்விகள் இந்த வாக்குச் சீட்டில் இருந்ததனால், 20 மில்லியனுக்கும் அதிகமான தனித்தனி வாக்குச் சீட்டுகள் ஊழியர்களால் கைகளால் எண்ணப்பட்டன.
நூற்றுக்கணக்கான கூடுதல் தற்காலிக ஊழியர்களை நள்ளிரவு வரை பணியமர்த்தி, கைகளால் வாக்குகளை எண்ணியதே இந்த செலவுக்கு முதன்மைக் காரணமாக குறிப்பிடப்படுகிறது.
வாக்கு எண்ணும் முறைகளில் ஏற்பட்ட இந்த அதிரடி உள்கட்டமைப்பு மாற்றங்கள், தற்காலிகப் பணியாளர்களின் ஊதியச் செலவுகள் காரணமாகத் Alberta தேர்தல் திணைக்களம் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துல்லது .
இதைத் தொடர்ந்து, இந்த பொதுவாக்கெடுப்பு, வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் தேவைகளைச் சமாளிப்பதற்காக, Alberta மாகாண அரசு கூடுதலாக $59 மில்லியன் அவசர நிதியைத் தேர்தல் திணைக்களகத்திற்கு உடனடியாக வழங்கியுள்ளதாக அரசாங்கத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
