தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுகின்றனர்!

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல சர்வதேச பயணிகள் மூன்று நாள் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரும் புதிய விதிக்கு இணங்க மறுத்துவருவதாக இன்று  காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வாரம் நடைமுறைக்கு வந்த COVID தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற மறுத்தவர்களுக்கு Ontarioவின் விதிமுறைகளின் கீழ் 880 டொலர்  அபராதம் விதிக்கப்பட்டதாகவும் Peel  பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக எவரையும் தடுத்து வைக்க மாட்டோம் எனவும்  காவல்துறையினர் கூறினர்.

தனிமைப்படுத்தல்  சட்டத்தின் கீழ் பயணிகளுக்கு  அபராதம் விதிக்கும் பொறுப்பு கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தை சார்ந்தது எனவும் Peel  பிராந்திய காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Quebecகில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க வடமேற்கு New Brunswick வரை Amber எச்சரிக்கை!

Gaya Raja

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

Leave a Comment