September 18, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்

Ontarioவில் COVID தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

Ontarioவின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் மேலதிக விபரங்கள் இன்று வெளியானது. மாகாணத்தின் நோய்த்தடுப்பு பணிக்குழுவின் தலைவர் Rick Hillier இன்று இந்த விபரங்களை அறிவித்தார். அடுத்த மாதம் தடுப்பூசிகளை பெறுவதற்க்கான முன்பதிவுகள் ஆரம்பமானாலும்  பலரும்  தடுப்பூசிக்கான முன்பதிவை  பெறுவதற்கு சில மாதங்களாவது எடுக்கும் என கூறப்படுகின்றது.

முதலில் எண்பதிற்கும் அதிக வயதில் உள்ளவர்கள் தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. April 15ஆம் திகதி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்ய முடியும் எனவும், May 1ஆம் திகதி முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Albertaவிலும் Quebecகிலும் பொது மக்கள் இந்த வாரம் முதல் தடுப்பூசிகளுக்கான முன்பதிவுகளை பெற ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மைக்கான பொது அழைப்பு!

Lankathas Pathmanathan

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment