தேசியம்
செய்திகள்

அதிகரிக்கும் கனடிய குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு

கனடிய குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு அதிகரிக்கிறது.

குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு பெறும் பெற்றோர்கள் வியாழக்கிழமை (20) முதல் அதிகரிப்பொன்றை எதிர்பார்க்கலாம்.

முந்தைய ஆண்டுக்கான நிகர குடும்ப வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு July மாதமும் குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறுகிறது.

கனேடிய குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் தனது அரசாங்கத்தின் ஒரு வழியாக இந்த அதிகரிப்பை பிரதமர் Justin Trudeau குறிப்பிடுகின்றார்.

கனடிய குழந்தை நலத்திட்ட கொடுப்பனவுகள் 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளன.

Related posts

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்கள்

Lankathas Pathmanathan

பயன்படுத்தப்படாத Johnson & Johnson தடுப்பூசிகள் மீண்டும் அனுப்பப்படுகின்றன!

Gaya Raja

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

Leave a Comment