கனடா Post நிறுவனம் புதிய ஆண்டு முதல் ஒரு சாதாரண உள்நாட்டுத் தபால் முத்திரையின் விலையை $2-ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் Mark Carney அரசாங்கம் வியாழக்கிழமை (05) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026 வரவு செலவுத் திட்டத்தின் பின்னணியில் இந்த அறிவித்தல் வெளியானது.
இன்றைய நிதிச் சுமைகளைச் சமாளிக்கவும், விநியோகக் கட்டமைப்பைத் தடையின்றித் தொடரவும் இந்த கட்டண உயர்வு முடிவை எடுத்துள்ளதாக கனடா Post நிறுவனம் தெரிவித்தது.
அஞ்சல் துறையின் நீண்ட கால நிதி நிலைத்தன்மைக்கு இது அவசியமாகிறது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
