தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்டம் 2026: $142 பில்லியன் புதிய நிதி ஒதுக்கீடு!

பிரதமர் Mark Carney தலைமையிலான மத்திய Liberal அரசு $142 பில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட புதிய நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் தனது  வரவு செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

நிதி அமைச்சர் François-Philippe Champagne இந்த வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பித்தார்.

கனடாவின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், மக்களின் வாழ்வாதாரச் செலவுகளைக் குறைக்கவும் $142 பில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட புதிய நிதி ஒதுக்கீட்டு திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பித்தார்.

கனடியர்களின் வாழ்வாதாரச் சுமையை குறைக்கவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் இந்த புதிய செலவினங்கள் அவசியம் என நிதி அமைச்சர்   தெரிவித்தார்.

Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் தனது இரண்டாவது முழுமையான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் $62.3 பில்லியன் பற்றாக்குறை கணிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த வசந்தகால பொருளாதார அறிக்கையில் கணிக்கப்பட்டிருந்த தொகையை விட $3 பில்லியன் குறைவானதாகும்.

அதேவேளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தை சமன்படுத்த வழியில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளின் பின்னணியிலும், ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ள 50 சதவீத வர்த்தக வரிகளுக்குப் பணியாமலும் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Mark Carney கூறினார்.

கனடியர்களின் அன்றாட வாழ்வாதார செலவுகளைக் கட்டுப்படுத்துவது இந்த வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை இலக்காக இருக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது.

Related posts

மீண்டும் அரசாங்கத்தில் இணையும் Han Dong?

Lankathas Pathmanathan

B.C. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Lankathas Pathmanathan

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment