தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து CSIS எச்சரிக்கை!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிட்டார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை தலையிட முயற்சிக்கக்கூடும் என மூத்த CSIS புலனாய்வு அதிகாரி எச்சரித்தார்.

பொதுத் தேர்தலின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவயின் துணை இயக்குநர் Vanessa Lloyd இந்த தகவலை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் அடுத்த தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டின் அறிகுறிகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக The Critical Election Incident Public Protocol (CEIPP) குழு கூறுகிறது.

Related posts

கனடியர்களின் ஆயுட்காலம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan

September மாதத்தின் பின்னர் அதிகுறைந்த தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja

சபை அமர்வுகளின் நடைமுறை குறித்து சபாநாயகரின் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment