பிரதமர் Mark Carney தலைமையிலான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) சமர்ப்பிக்கப்பட்ட $142 பில்லியன் புதிய செலவினங்களுடனான 2026 வரவு செலவுத் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி விமர்ச்சித்துள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டம் கனடியர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சீரழிக்கும் ஒரு வெற்று ஆடம்பரத் திட்டம் என Pierre Poilievre விமர்சித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர், Liberal அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த வரவு செலவுத் திட்டம் கனடிய நுகர்வோருக்கு புதிய பணவீக்க பேரழிவை ஏற்படுத்தும் என Pierre Poilievre எச்சரித்துள்ளார்.
கனடாவின் ஒட்டுமொத்தத் தேசியக் கடன் $1.3 டிரில்லியனைத் தாண்டியுள்ள சூழலில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் தொடர்ந்து $50 பில்லியனுக்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறையை இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் Liberal அரசின் இந்த நிதிநிலை அறிக்கையை Conservative கட்சி முழுமையாக நிராகரித்து வாக்களிக்கும் என Pierre Poilievre பிரகடனப்படுத்தினார்.
