தேசியம்
செய்திகள்

இளவரசர் William-முடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் Mark Carney!

கனடிய பிரதமரும் British அரச குடும்பத்தின் இளவரசரும் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.

பிரதமர் Mark Carney, British அரச குடும்பத்தின் இளவரசரான William-முடன் திங்கட்கிழமை (21) தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

கனடிய பிரதமர் அலுவலகம் இந்த உரையாடலை உறுதிப்படுத்தியது.

New York நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்கான இராஜதந்திரப் பயணத் தயாரிப்புகளுக்கு மத்தியில் இந்த உயர்மட்ட உரையாடல் நிகழ்ந்துள்ளது.

கனடா,  British அரச குடும்பத்திற்கு இடையேயான நீண்டகால நட்புறவை தொடர்வது குறித்தும், தற்போதைய உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிய வருகிறது.

கனடிய மத்திய வங்கி அண்மையில் புதிய $20 பண தாளில் மூன்றாம் Charles மன்னரின் படத்தை வெளியிட்டுள்ள நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

Related posts

உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தை மாகாண முதல்வர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja

Leave a Comment