Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Bonnie Crombie உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகினார்.
இந்தப் பதவி விலகல் “உடனடியாக அமுலுக்கு வருகிறது” என புதன்கிழமை (14) ஒரு செய்திக் குறிப்பில் Ontario Liberal கட்சி தெரிவித்துள்ளது.
புதிய ஆண்டை ஆரம்பிக்கும் வேளையில் தனது பதவி விலகளுக்கு இதுவே சரியான தருணம் என நம்புவதாக ஒரு அறிக்கையில் Bonnie Crombie தெரிவித்தார்.
தனது முறையான பதவி விலகல் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க ஏதுவாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
Mississauga நகர முன்னாள் முதல்வரான , 2023 -இல் Liberal தலைமைப் போட்டியில் வெற்றி பெற்று, கடந்த ஆண்டு தேர்தலில் கட்சியை வழி நடத்தினார்.
இந்தத் தேர்தலில் Liberal கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெற்றாலும், அவர்கள் Progressive Conservative, NDP கட்சிகளுக்குப் பின்னால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் Bonnie Crombie ஒரு ஆசனத்தை வெல்லத் தவறினார்.
தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், அவர் Liberal கட்சியின் தலைவராக நீடிக்க முடிவு செய்தார்.
ஆனால் September மாதம் நடந்த கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பலவீனமான ஆதரவு வெளிப்பட்டதைத் தொடர்ந்து, கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பின்னர் பதவி விலகுவதாக Bonnie Crombie அறிவித்தார்.
கட்சியின் தலைமை மதிப்பாய்வில் 57 சதவீத ஆதரவை மாத்திரமே அவர் பெற்றிருந்தார்.
ஆனாலும் பல மாதங்கள் கடந்த நிலையில் அவருக்குப் பதிலாக ஒரு புதிய தலைவரை தேர்தெடுப்பதற்கான போட்டியை கட்சி இதுவரை அறிவிக்கவில்லை.
Bonnie Crombie பதவி விலகுவதாக அறிவித்ததிலிருந்து, மாகாணசபை உறுப்பினர் John Fraser சட்டமன்றத்தில் Liberal கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில் Ontario Liberal கட்சி இந்த ஆண்டு தலைமை போட்டியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த February மாதம் தனது மூன்றாவது தொடர்ச்சியான பெரும்பான்மை அரசாங்கத்தை Doug Ford வெற்றி பெற்றார்.
புதிய தலைவரை தெரிவு செய்யும் தலைமைப் போட்டியைத் திட்டமிடுவதில் கட்சி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக John Fraser அண்மையில் கூறினார்.
ஐந்து பேர் கொண்ட குழு தேர்தல் விதிகள், நேரம், வாக்களிக்கும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் Liberal கட்சிக்கு ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
LJI Reporter ரம்யா சேது
