December 13, 2025
தேசியம்
செய்திகள்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறார்.

தனது பதவி விலகல் முடிவை ஒரு அறிக்கையில் Alberta நாடாளுமன்ற உறுப்பினரான அவர் வியாழக்கிழமை (06) இரவு அறிவித்தார்.

ஆனாலும் தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.

இந்த பதவி விலகல் அவரது Edmonton   தொகுதியில் உடனடி இடைத்தேர்தலுக்கு வழிசமைக்கும்.

April மாதத்தில் Liberal  போட்டியாளரை விட Matt Jeneroux ஐந்து சதவீத புள்ளிகள் என்ற ஒப்பீட்டளவில் குறுகிய வித்தியாசத்தில் இங்கு வென்றார்.

Matt Jeneroux-கின் சேவைக்கு நன்றி தெரிவித்த  Conservative தலைவர் Pierre Poilievre, இவரது அதிகாரப்பூர்வ பதவி விலகல் நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என தெரிவித்தார்.

கனடியர்கள் Pierre Poilievre தலைமையிலான Conservative அணியில் நம்பிக்கை வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் தான் போட்டியிட்டதாக Matt Jeneroux தனது பதவி விலகல் அறிக்கையில் தெரிவித்தார்.

தேர்தல் முடிவு தான் எதிர்பார்த்தது போல் அமையவில்லை எனவும் அவர் கூறினார்.

இரண்டு நாட்களில் பதவி விலகிய இரண்டாவது Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux ஆவார்.

Liberal கட்சியில் இணைவது குறித்து Matt Jeneroux பரிசீலித்து வரக்கூடும் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நாளின் பின்னர் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.

கட்சி மாற்றம் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux கட்சியை விட்டு வெளியேறவில்லை என புதன்கிழமை (05) ஒரு அறிக்கையில் கூறிய அவரது அலுவலகம், அவர் தொடர்ந்தும் ஒரு Conservative நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் எனவும் தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

கட்சியை விட்டு விலகப் போகிறார் என்ற அச்சம் காரணமாக, கட்சியில் உள்ள சிலரால் அவர் அழுத்தத்திற்கு உள்ளானதாக Conservative வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Matt Jeneroux, புதன்கிழமை காலையும் பிரதமர் Mark Carney அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உரையாடினார் என தகவல் அறிந்த இரண்டு தரப்புகள் தெரிவித்தாக CTV செய்தி வெளியிட்டது.

இந்த சந்திப்பை தொடர்ந்து Matt Jeneroux கட்சி மாறுவார் என்ற எண்ணம் இந்த உரையாடலுடன் தொடர்புடைய அனைவர் மத்தியிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது கட்சி மாறல்  வாய்ப்புள்ள குறித்த ஊகங்கள் எழுந்த நிலையில், Matt Jeneroux கட்சி மாறினால் அதனால் விளைவுகள் ஏற்படும் என Conservative கட்சி அதிகாரிகள் அவருக்கு தெரிவித்தனர் எனவும் கூறப்படுகிறது.

இது அவர் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என அவரது அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

வியாழக்கிழமையும் Matt Jeneroux தொடர்ந்து Liberal கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல் அறிந்த இரண்டு தரப்புகள் உறுதிப்படுத்தின.

ஆனால் இறுதியில் கட்சி மாறுவதற்கு எதிராக அவர் முடிவு செய்தார் என தெரியவருகிறது.

Liberal தரப்பை “நம்ப முடியுமா” என்ற கேள்வியே அவரது இந்த இறுதி முடிவுக்கு அடித்தளமாக அமைந்தது என தகவல் அறிந்த தரப்புகள் கூறுகின்றன.

வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த வரவு செலவு திட்டத்தின் முதலாவது  நம்பிக்கை வாக்கெடுப்பில் Matt Jeneroux வாக்களிக்கவில்லை.

இந்த வாக்களிப்பில் Liberal அரசாங்கம் வெற்றியடைந்தது.

Alberta மாகாணத்தின் Edmonton Riverbend தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் Matt Jeneroux, முதன் முதலில் 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

செவ்வாய்கிழமை (04) Conservative கட்சியில் இருந்து விலகிய Liberal அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

அமெரிக்க எதிர்ப்பு வரி விளம்பரங்கள் குறித்து கனடிய முதல்வர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து

Lankathas Pathmanathan

Leave a Comment